Wednesday, 21 September 2016

சத்திய தரும சாலை - சத்திய ஞான சபை

[இன்றய நமது நல் சிந்தனைக்கு ]
சத்திய தரும சாலை
சத்திய ஞான சபை

சத்தியம் என்ற சொல் ஏன் தரும சாலை - ஞான சபையில் உள்ளது?
தருமம் என்றால் என்ன?
சாலை என்றால் என்ன?

சத்திய தருமம் என்று சொல்லுகிறோம்?
ஆனால் உணவு அல்லவா அங்கு வழங்க படுகிறது.
அணையா அடுப்பு அல்லவா அங்கு உள்ளது?
பெருமானுக்கு பூசை செய்யும் இடத்தில ஒரு பீடம் அமைத்து உள்ளது ஏன்?
பூசை வழிபாடு(திருநீறு - சர்க்கரை கொடுக்க படுகிறது)
தரும சாலையில் உண்டு ஏன் ஞான சபையில் இல்லை?

சபைக்கும் சாலைக்கும் என்ன வேறுபாடு?

எங்க ஊர் வழக்கில் சாலைக்கு போ என்றும் கூறுவர் .
மாட்டு சாலை என்று உள்ளது அல்லவா?
சாலை என்றால் ரோடு என்று சொல்லலாம்...

தருமம் -> நற்செயல்,விதி ஒழுக்கம்,கடமை,நீதி,தானமுதலிய அறம்,இயற்கை
சாலை -> பாட சாலை, தொழிற்சாலை, சிறைச்சாலை, பண்டகச்சாலை

இங்கு சத்தியம் தருமம் சாலை எப்படி அர்த்தம் கொள்வது?
சபை - அவை, மன்றம்

இதுபோல் தினமும் அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து யோசித்தால்
எப்படி இருக்கிறது என்று பகிரவும்.